Posts

Showing posts from July, 2017

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்

நாட்டில், விவசாயத்துடன், தொழில் துறையையும் வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்பதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய, பா.ஜ., அரசு நடைமுறையில் நிரூபித்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறினார். இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளி லும், 'சுலப்' தொண்டு நிறுவனத்தின் சார்பில், இலவச கழிப்பறைகளை கட்டி, மக்களுக்கு தொண்டாற்றி வரும், அதன் நிறுவனர், டாக்டர் பிந்தேஷ்வர் பதங்க் எழுதிய, 'தி மேககிங் ஆப் எ லெஜென்ட்'புத்தகத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லியில் நேற்று வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய  தலைவர், மோகன் பாகவத் பங்கேற்று பேசினார். புத்தகத்தை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது: நாட்டின் பிரதமராக, நரேந்திர மோடி பொறுப்பேற்ப தற்கு முன், உலக நாடுகள் மத்தியில், இந்தியா, எழுச்சி பெறாதநாடாகவே இருந்தது.   மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்த பின், அந்த நிலை தலைகீழாக மாறியது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலக நாடுகளுடனான நட்பை வலுப்படுத்தி னார். உலக நாடுகள் மத்தியில், நம் நாட்டை தலைநிமிரச் செய

சசியை சிக்க வைத்த ரூபா யார்?

Image
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, இதற்கு முன் தற்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதியை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறி பார்த்து சுடுவதில் வல்லவர் கர்நாடக மாநிலம், தேவங்கரே பகுதியை சேர்ந்தவர் ரூபா. இவர் சிவில் சர்வீஸ் தேர்வில், 2000ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்; தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியிலில், 43வது இடம் பிடித்தவர். ஐதராபாத்தில் ஐ.பி.எஸ்., பயிற்சி பெற்ற போது, ஐந்தாவது இடத்தை பிடித்தவர். குறி பார்த்து சுடுவதில் திறன் மிகுந்தவர். தேசிய போலீஸ் அகாடமியில் பல விருதுகளை பெற்றவர். 2016ம் ஆண்டு ஜன., 26ம் தேதி ஜனாதிபதி விருது பெற்றவர். பரத நாட்டியம் பயின்றவர் ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, முறையாக பரத நாட்டியம் பயின்றவர். அதே போல், இந்துஸ்தானி இசையையும் பயின்றவர். மத்திய பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை, நீதிமன்ற உத்தரவின் பேரில்கைது செய்தவர். பெங்களூருவில், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய போது, வ

பழைய நகையை விற்றால் 3% ஜி.எஸ்.டி.,

Image
பழைய தங்க நகைகளை விற்றால், 3 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியதாவது: பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஒரு வேளை, பழைய நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3 சதவீத வரியை கழித்து கொள்ளலாம். ஒருவரிடம் இருந்து நகை கடை வைத்து இருப்பவர் பழைய நகையை வாங்கினால், 3 சதவீத ஜி.எஸ்.டி.,யை வசூலிக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருவரிடம் இருந்து பழைய நகையை நகை கடைக்காரர் வாங்கினால் , 3,000 ரூபாயை கழித்து கொண்டு தான் மீதி தொகையை வழங்க வேண்டும்.அதே நேரத்தில், பழைய நகையை கொடுத்து அதில் மாற்றம் செய்து தரும்படி கேட்டால், அது, 'ஜாப் ஒர்க்' என, கருதப்பட்டு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வெடிமருந்து வாங்க ராணுவ துணை தளபதிக்கு அதிகாரம்

Image
புதுடில்லி: குறுகிய மற்றும் தீவிர போரை சமாளிக்கும் வகையில், வெடிமருந்துகள் வாங்குவதற்கு தேவையான பணத்தை செலவிடும் அதிகாரத்தை ராணுவ துணை தளபதி சரத் சந்துக்கு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் 18 ல் காஷ்மீர் மாநிலயம் யூரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தற்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல், தேவையான ஆயுதங்களை வாங்கி கொள்ளுமாறு, ராணுவ துணை தளபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 10 வகையான ஆயுதங்களுக்கு 46 வகையான வெடிபொருட்கள் தேவைப்படுவதாக ராணுவம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பான 12 ஆயிரம் கோடி மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு சென்றுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் வீட்டை காலி செய்! - அத்துமீறும் காவல்துறை

நெல்லை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள்  குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றச் சொல்வதாகவும்  போலீஸார் மீது எழுந்துள்ள பரபரப்புப் புகார் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ''அரசியல் அமைப்பைப் பேணிக்காப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்!'' - ராம்நாத் கோவிந்த் வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முன் அனுமதி பெற்று இந்த வகையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது. நெல்லையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் தொந்தரவு செ

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், போராட்டங்கள்.. பேஷனுக்காக செய்கிறார்களா மக்கள்?

Image
Short News  Home  »  News  »   செய்திகள்   »   தமிழகம் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், போராட்டங்கள்.. பேஷனுக்காக செய்கிறார்களா மக்கள்? Posted By:  Amudhavalli Published :  July 7 2017, 15:19 [IST] சென்னை: ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், மக்கள் பொழுது போகாமல் நாள் கணக்கில் போராட்டம் நடத்தி அதை பேஷனாக மாற்றிவிட்டார்கள். அப்படித்தான் இருக்கிறது நமது முதல்வர் சொல்லும் பேஷன் கூற்று. தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எப்போதுமே ஒரு மதிப்பு மரியாதை இந்திய அளவில் உண்டு. அதற்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து கடைசியாக உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரை சாட்சி உள்ளது. இந்திய அளவில் உள்ள மற்ற மாநிலங்களும் நமது போராட்டங்களின் வழிமுறைகளை பின்பற்றி போராடும் அளவிற்கு சிறப்பான வீரியமான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. அவைகள் எல்லாம் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பேஷனாகிவிட்டது. சும்மா பொழுது போக்க.. போராடும் மக்களுக்கு பொழுது போகாமல், வெட்டி நேரத்தை எப்படி வீணடிப்பது என்று ரூம் போட்ட

காஜல் அகர்வால் தூங்கிப் பல வருஷங்களாச்சு!

நன்றாக தூங்கிப் பல ஆண்டுகளாகிவிட்டது என்று தல,தளபதி ஹீரோயின் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இவர் விஜயுடன் ‘மெர்சல்',அஜித்துடன் ‘விவேகம்' என்று பிஸியாக நடித்து வருகிறார் இதில்,அஜித்துடன் முதல் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் என்று குறிப்பிட்டுள்ளார். கிளாமர் இல்லாமல் ஸ்ட்ராங்கான பெண்களைப் பற்றிய கதைகளில் அதாவது, பாலிவுட்டில் ‘பிங்க்' படத்தில் டாப்ஸி கேரக்டர் போல் நடிக்க ஆசையாக உள்ளது

மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் 1912 கன அடி நீர் வரத்து... காவி

Image
சேலம்: மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் வினாடிக்கு 1912 கன அடி வீதம் நீர் வந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரு அணைகளில் இருந்தும் 3,365 கன அடி நீர் நீரை கர்நாடக அரசு திறந்து விட்டது. இந்த நீரானது ஒரு வாரம் கழித்து நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1000 கனஅடியாக நீர் வந்த நிலையில் மேலும் 912 கன அடி அதிகரித்து நேற்று ஒரே நாளில் வினாடிக்கு 1912 கனஅடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 20.48 அடியாக உள்ளது. மேட்டூர் அணை நீரின் அளவு 4.24 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் திறந்துவிட்டப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையின் புதிய சட்டத்திற்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்புப்பு தெரிவித்து, அதை திரும்பப் பெற இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். SHARE இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்திருத்தத்தை மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீராவால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழ்க மீனர்வகளுக்கு ரூ.2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டும். அதேபோல், தடைவிதிக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்கும் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த சட்டத்தால், ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்தும், சட்டத்தை திரும்பப்பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் விதமாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழை பெய்யும்:வானிலை மையம்!

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. SHARE கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் மட்டும் இதுவரை 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் : சகாயம் ஐஏஎஸ் அழைப்பு TNN | Updated Jul 9, 2017, 07:07 AM IST AAA

  தஞ்சை : இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை தாரக மந்திரமாக கொண்டு இயங்கிவருபவர் சகாயம் ஐஏஎஸ் இவருடைய நேர்மையான செயல்பாடு காரணமாக இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார். தற்போது இவர் இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறும் போது," இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய தலைவர்களை கொண்டு வர இளைஞர்களால் மட்டும் முடியும். இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் . நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் அரசியலில் நேர்மையான தலைமையை உருவாக்க முடியும் " என்று கூறினார்.

🔥🔥🔥 *வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்...!* *”இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா..”* கதிராமங்கலத்திற்கு ஆதரவாக மதுரை சௌராஷ்ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! #கதிராமங்கலம்

ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டுமெனக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். குழாயை சரி செய்ய வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என அரசும் ஓ.என்.ஜி.சியும் சொல்கின்றன.இதற்கிடையில்  கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கொண்டு வரப்பட்டுள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கூறினார். மேலும் தமிழக காவல்துறையினரால் சிறிய அளவிலான தடியடி மட்டுமே நடத்தப்பட்டதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கார்களில் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வைக்க