நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்

நாட்டில், விவசாயத்துடன், தொழில் துறையையும் வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்பதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய, பா.ஜ., அரசு நடைமுறையில் நிரூபித்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளி லும், 'சுலப்' தொண்டு நிறுவனத்தின் சார்பில், இலவச கழிப்பறைகளை கட்டி, மக்களுக்கு தொண்டாற்றி வரும், அதன் நிறுவனர், டாக்டர் பிந்தேஷ்வர் பதங்க் எழுதிய, 'தி மேககிங் ஆப் எ லெஜென்ட்'புத்தகத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லியில் நேற்று வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர், மோகன் பாகவத் பங்கேற்று பேசினார். புத்தகத்தை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது: நாட்டின் பிரதமராக, நரேந்திர மோடி பொறுப்பேற்ப தற்கு முன், உலக நாடுகள் மத்தியில், இந்தியா, எழுச்சி பெறாதநாடாகவே இருந்தது. 
மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்த பின், அந்த நிலை தலைகீழாக மாறியது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலக நாடுகளுடனான நட்பை வலுப்படுத்தி னார். உலக நாடுகள் மத்தியில், நம் நாட்டை தலைநிமிரச் செய்தார்.
விவசாயம், தொழில் துறை ஆகிய இரண்டையும், ஒரே நேரத்தில் சீராக வளர்ச்சி அடையச் செய்த பெருமை, மோடியை சேரும். பா.ஜ., தலைமை யிலான ஆட்சியில், 7.28 கோடி இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக் கடன்மூலம், ஏராளமானோர் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளனர்.
கிராமம், நகர்ப்புற கட்டமைப்பு செம்மைப் படுத்தப் பட்டுள்ளது. 4.38 லட்சம் கழிப்பறைகள் கட்டப் பட்டு உள்ளன. கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு, இலவச, 'காஸ்' இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தலித், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பாடுபட்டு வருகிறது. இதன் மூலம் பலர் பலன டைந்துள்ளனர். ஏழைகள் நலனின் அக்கறை காட்டுவது போல் பேசும் காங்கிரசார், அதை அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் செயல்படுத் தியிருந்தால், நாடு இன்னமும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். 
விவசாயத்தையும், தொழில் துறையையும் ஒரு சேர வளர்ச்சி அடையச் செய்து, மோடி சாதனை படைத்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.x

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!