Posts

மாறுகிறது மெர்சல் படத்தின் டைட்டில்! புதுப்பெயர் என்ன தெரியுமா?

Image
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மெர்சல் படம் தற்போது இணையத்தில் தனது டீசர் மூலம் பல சாதனைகளை செய்தது. இதனிடையே மெர்சலாகிட்டேன் என்ற தலைப்பு பல வருடங்கள் முன்பே தான் பதிவு செய்துவிட்டதாகவும், விஜய் நடிக்கும் மெர்சல் படத்தினால் தன் படத்திற்கு பாதிப்பு வரும் எனவும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெர்சல் என்னும் பெயரை விளம்பரம் செய்ய தற்காலிக தடை விதித்தது. தடைப்படி அக் – 3ம் தேதி வரை மெர்சல் என்னும் பெயரை படக்குழு எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்த முடியாது. இவ்வழக்கின் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடர்ந்து இந்த தடை நீடிக்குமானால் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் வரும், இதனால் அவசர அவசரமாக மாற்று பெயரை யோசித்து வருகின்றனராம் படக்குழுவினர். தற்போதைக்கு ஆளப்போறான் தமிழன் என்பதை தலைப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனினும் விசாரணை முடிவு தங்களுக்கு சாதகமாக வரும்பட்சத்தில் மெர்சல் என்ற பெயரையே தொடர்வதாக முடிவு செய்துள்ளனர். மெர்சலா? ஆளப்போறான் தமிழனா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அட்லீக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய அஜித் ரசிகர்கள்! டென்ஷன் ஆன அட்லீ.. அப்படி என்ன பரிசு?

Image
அட்லீ தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர் இவர் குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகர்களை வைத்தது படம் இயக்க தொடங்கினார் இவர் இயக்கிய முதல் படம் ராஜாராணி இந்தப்படம் அட்லீக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.  ‘தெறி’ யை தொடர்ந்து ’மெர்சல்’ மூலம் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் இயக்குநர் அட்லி. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயக்குநர் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்.21) ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.இந்த நிலையில், இயக்குநர் அட்லிக்கு பல்வேறு தரப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அஜித் ரசிகர்கள் கூட அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள் ஆனால், அஜித்  ரசிகர்களின் பிறந்தநள் வாழ்த்தால் மகிழ்ச்சிக்கு அடைவதற்கு பதில் ரொம்பவே சோகமடைந்துள்ளார். காரணம், அட்லி இயக்கும் படக்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்பதை, பல விதமான மீம்ஸ்களை கிரியேட் பண்ணி அதன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறா

துப்பறிவாளன் விமர்சனம்! இந்த படத்துல இருக்கற ஒரே அப்பாவி பிரசன்னா

Image
Thupparivaalan Movie Review Cast : Vishal, Prasanna, K Bhagyaraj, Andrea Jeremiah, Anu Emmanuel, Vijay Rai, Simran, Jaya Prakash, John Vijay & Others Music : Arrol Corelli Studio : Vishal Film Factory Producer : Vishal Written & Directed by Mysskin 1st Half – Good 2nd Half – Above Average Winner: Cinematography Karthik Venkatraman, Music Composer Arrol Corelli Runner up: Vishal for Producer, Mysskin for his trademark scenes.. Loser: Prasanna (நல்ல நடிகர் தயவு செஞ்சி இதுமாதிரி டம்மி ரோல் வேணாம்). இவரே ஒரு ஹீரோ. கடைசில விஷாலுக்கு கட்ட அவுத்து விடுறதுலாம் ஓவர்.

ஜோதிகா மேல் வருத்தத்தில் கார்த்தி! எதற்கு தெரியுமா?

Image
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் புரிந்தது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு நடிக்காமலிருந்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், நல்ல படம் என்று பலராலும் பேசப்பட்டது. தற்போது பெண்களை பற்றிய திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார். அவரிடம் தங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதும், “என் கணவர் சூர்யாவிற்கு பிறகு தற்போது எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி” என்று முக நூல் லைவ்வில் ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்தார். சூர்யாவிற்கு பிறகு தன் பெயரை சொல்லாமல் விஜய் சேதுபதி பெயரை சொன்னதால் கொழுந்தன் கார்த்தி அண்ணி மீது வருத்தத்தில் உள்ளாராம், இந்த விஷயத்தை பற்றி தன் மனைவியிடமும், சூர்யாவிடமும் மீண்டும் மீண்டும் புலம்பி தள்ளுகிறாராம் கார்த்தி.

பெல்ஜியம் : மாணவிகளே பாலியல் தொழில் செய்து படிக்கலாம் , சம்பாதிக்கலாம்!

Image
Kalai Marx  : கல்லூரி மாணவிகளே! படிப்பதற்கு பணம் இல்லையா? பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம்! பெல்ஜியத்தில் ஒரு விபச்சார தரகு நிறுவனத்தின் விளம்பரம். This is the glory of Capitalism. A street advertisement in Belgium calling the female students to earn money in prostitution. "Hey students! 0,- student loan? Date with a Sugar daddy" "மேற்குலகின் மகிமை பொருந்திய முதலாளித்துவ நாகரிகம்." மேற்கத்திய நாடுகளில் கல்வியை தனியார்மயமாக்கியதன் விளைவாக, ஏழைகள் படிக்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் உயர்ந்து வருகின்றது. எல்லோருக்கும் கல்விக் கடன் கிடைப்பதுமில்லை. இந்த நிறுவனம் சாட்டாக வைத்து, மாணவிகளை பணக்கார ஆண்களுடன் பாலியல் தொழில் செய்வதற்கு அழைக்கிறது.

கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா??

Image
கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா?? இந்தியாவில், கிடைக்கும் பொது தளங்களை பிரச்சார மேடையாக்கி அதன் மூலம் பெருவாரியான மக்களிடம் கருத்துப் பிரச்சாரத்தை கொண்டு செல்லும் உத்தியைத் தொடங்கியவர்கள் இடது சாரிகள். இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்ட இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கம்யூனிச, சோசலிச கருத்துக்களை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிராக வலதுசாரி தத்துவார்த்தம் தலைதூக்கிய போதெல்லாம் அதனை இவர்கள் முறியடித்தனர். சுதந்திர போராட்ட தலைவர்கள், தொண்டர்கள் அடுத்த கட்ட போராட்டம் பற்றி கூடி முடிவெடுக்க இயலாத அசாதாரணமான அடக்கு முறை நிலவிய போது மும்பையில் விநாயக சதுர்த்தி விழாவை நடத்தி அதில் சுதந்திர போராட்ட வீரர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்க வழிவகுத்தார் பாலகங்காதர திலகர். இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்த போது பேச்சு உரிமை, எழுத்து சுதந்திரம் தடை செய்யப்பட்ட நிலையில் தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு திருமண விழாக்களை பயன்படுத்தினார் தி மு க தலைவர் கருணாநிதி. தி மு க தல