வெடிமருந்து வாங்க ராணுவ துணை தளபதிக்கு அதிகாரம்

புதுடில்லி: குறுகிய மற்றும் தீவிர போரை சமாளிக்கும் வகையில், வெடிமருந்துகள் வாங்குவதற்கு தேவையான பணத்தை செலவிடும் அதிகாரத்தை ராணுவ துணை தளபதி சரத் சந்துக்கு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் 18 ல் காஷ்மீர் மாநிலயம் யூரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தற்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல், தேவையான ஆயுதங்களை வாங்கி கொள்ளுமாறு, ராணுவ துணை தளபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 10 வகையான ஆயுதங்களுக்கு 46 வகையான வெடிபொருட்கள் தேவைப்படுவதாக ராணுவம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பான 12 ஆயிரம் கோடி மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு சென்றுள்ளது.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்