பழைய நகையை விற்றால் 3% ஜி.எஸ்.டி.,

பழைய தங்க நகைகளை விற்றால், 3 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நகை, ஜி.எஸ்.டி., நகை கடைக்காரர், மத்திய வருவாய் செயலாளர் GST, Good and Services Tax
இது குறித்து மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியதாவது: பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஒரு வேளை, பழைய நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3 சதவீத வரியை கழித்து கொள்ளலாம். ஒருவரிடம் இருந்து நகை கடை வைத்து இருப்பவர் பழைய நகையை வாங்கினால், 3 சதவீத ஜி.எஸ்.டி.,யை வசூலிக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருவரிடம் இருந்து பழைய நகையை நகை கடைக்காரர் வாங்கினால் , 3,000 ரூபாயை கழித்து கொண்டு தான் மீதி தொகையை வழங்க வேண்டும்.அதே நேரத்தில், பழைய நகையை கொடுத்து அதில் மாற்றம் செய்து தரும்படி கேட்டால், அது, 'ஜாப் ஒர்க்' என, கருதப்பட்டு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்