இலங்கையின் புதிய சட்டத்திற்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்புப்பு தெரிவித்து, அதை திரும்பப் பெற இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHAREஇலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்திருத்தத்தை மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீராவால் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழ்க மீனர்வகளுக்கு ரூ.2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டும். அதேபோல், தடைவிதிக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்கும் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த சட்டத்தால், ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்தும், சட்டத்தை திரும்பப்பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் விதமாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்