மாறுகிறது மெர்சல் படத்தின் டைட்டில்! புதுப்பெயர் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மெர்சல் படம் தற்போது இணையத்தில் தனது டீசர் மூலம் பல சாதனைகளை செய்தது.
இதனிடையே மெர்சலாகிட்டேன் என்ற தலைப்பு பல வருடங்கள் முன்பே தான் பதிவு செய்துவிட்டதாகவும், விஜய் நடிக்கும் மெர்சல் படத்தினால் தன் படத்திற்கு பாதிப்பு வரும் எனவும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெர்சல் என்னும் பெயரை விளம்பரம் செய்ய தற்காலிக தடை விதித்தது. தடைப்படி அக் – 3ம் தேதி வரை மெர்சல் என்னும் பெயரை படக்குழு எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்த முடியாது.
இவ்வழக்கின் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடர்ந்து இந்த தடை நீடிக்குமானால் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் வரும், இதனால் அவசர அவசரமாக மாற்று பெயரை யோசித்து வருகின்றனராம் படக்குழுவினர்.
தற்போதைக்கு ஆளப்போறான் தமிழன் என்பதை தலைப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனினும் விசாரணை முடிவு தங்களுக்கு சாதகமாக வரும்பட்சத்தில் மெர்சல் என்ற பெயரையே தொடர்வதாக முடிவு செய்துள்ளனர்.
மெர்சலா? ஆளப்போறான் தமிழனா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்