ஆண்களுக்கு சில அழகு குறிப்புகள்!

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இதற்கேற்ப நாம் உடை மட்டும் அழகாக அணிந்தால் போதாது. நாமும் பொலிவுடன் இருக்க வேண்டும். வெயிற்காலங்களில் முகம் கருப்பாகி நமது அழகை கெடுத்து விடுகின்றது, இதை போக்கி முகம் அழகுடன் பொலிவுடன் இருக்க ஆண்களுக்கான அழகு குறிப்புக்கள் சில:
வெயிலில் சுற்றித் திரிந்து வந்தவுடன் தினமும் பசும் பாலின் ஆடையை எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்த்து ஊற வைக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசவும். முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும், கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
ஆண்களுக்கான எளிய முறையிலான பேஸ் பேக்:
ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
வாழைப்பழ பேக்:
வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஆண்களின் வறட்சியான சருமத்திற்கு இது புத்துணர்ச்சியைத் தரும்.
புதினா பேக்:
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு:
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் வெளுப்பதை உங்களால் உணர முடியும்.
தக்காளி பழ மாஸ்க்:
ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்:
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்திலுள்ள இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.
வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது புத்துணர்ச்சியோடு இருக்கும்.

Comments

  1. Jammy Monkey Returns from Las Vegas, NV - Jtm Hub
    Jammy Monkey Returns from Las Vegas, NV The brand new 안양 출장안마 Jammy Monkey slot game comes with a set 통영 출장샵 of free 서울특별 출장마사지 spins, a bonus round and 안성 출장샵 a wild symbol. 계룡 출장마사지

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்