கேரளத்து தேவதைகளின் அழகு ரகசியங்கள்

இந்தியாவின் கேரள மாநிலத்துப் பெண்கள் ஒருவிதமான அழகு என்று தான் கூற வேண்டும். பொதுவாக, கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருங்கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் ஆகிய கருத்துகள் தான் நமக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர்களின் அழகு பராமரிப்புதான். இத்துடன் இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தால் அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டும் உள்ளது.
நீளமான கருங்கூந்தல் : கேரளத்துப் பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கின்றது. இத்துடன், ஷாம்புவிற்குப் பதிலாக சீகைக்காயை அரைத்து, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.
மென்மையான சருமம்: சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அத்துடன், முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது. கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள்.
அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம். கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.
அழகான கண்கள் : கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.
இதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவு தூங்கும் முன், சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்