மும்பை எக்ஸ்பிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்தது புனே

மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு புனே அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. நேற்று விறுவிறுப்பாக நடந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி புனே அணியின் ரஹானேவும் திரிபாதியும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினார். இருந்தாலும் ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்சரும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். திரிபாதி 2 சிக்ரன், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 17, ரன்கள் எடுத்தார். பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, 11 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஸ்டோக்ஸ் 17, திவாரி 22 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் புனே 6 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்தது.
மும்பை தரப்பில் ஜான்சன் 1, பும்ரா, ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய மும்பை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல் 33 ரன்களும், ஜோ பட்லர் 17 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்காக போராடிய ரோகித் ஷர்மா 39 பந்துகளில் 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 58 ரன்கள் விளாசினார். புனே தரப்பில் பென் ஸ்டோக்ஸ், உனட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ‌
ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம், மும்பையின் தொடர் வெற்றிக்கு புனே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்