நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்
நாட்டில், விவசாயத்துடன், தொழில் துறையையும் வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்பதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய, பா.ஜ., அரசு நடைமுறையில் நிரூபித்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறினார். இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளி லும், 'சுலப்' தொண்டு நிறுவனத்தின் சார்பில், இலவச கழிப்பறைகளை கட்டி, மக்களுக்கு தொண்டாற்றி வரும், அதன் நிறுவனர், டாக்டர் பிந்தேஷ்வர் பதங்க் எழுதிய, 'தி மேககிங் ஆப் எ லெஜென்ட்'புத்தகத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லியில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர், மோகன் பாகவத் பங்கேற்று பேசினார். புத்தகத்தை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது: நாட்டின் பிரதமராக, நரேந்திர மோடி பொறுப்பேற்ப தற்கு முன், உலக நாடுகள் மத்தியில், இந்தியா, எழுச்சி பெறாதநாடாகவே இருந்தது. மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்த பின், அந்த நிலை தலைகீழாக மாறியது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலக நாடுகளுடனான நட்பை வலுப்படுத்தி னார். உலக நாடுகள் மத்தியில், நம் நாட்டை தலைநிமிரச் செய...